tntj 18 பொதுக்குழு தீர்மானங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் ஞாயிறு (26-03-2017) காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழுத் தலைவர் அப்துன்நாசிர் அவர்கள்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் ஞாயிறு (26-03-2017) காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழுத் தலைவர் அப்துன்நாசிர் அவர்கள் தலைமையில் ஈரோடு பிளாட்டினம் மஹாலில் துவங்கியது.
முதலாவதாக மாநிலத் துணைத் தலைவர் எம்.ஐ. சுலைமான் அவர்கள் உளத்தூய்மை என்ற தலைப்பில் துவக்க உரையாற்றினார். தணிக்கை குழு தலைவர் செய்யது இப்ராஹிம் கணக்குகளை தணிக்கை செய்து வாசித்தார். பொருளாளர் கலீல் ரஸுல் ஆண்டின் வரவு செலவுகளை தாக்கல் செய்தார். மாநிலபொதுச்செயலாளர் முகம்மது யூசுப் ஓர் ஆண்டிற்கான செயல் பாடுகளை பட்டியலிட்டார்.
மாநிலச் செயலாளர் எம்.எஸ்.சுலைமான் நிர்வாகிகள் சமுக வலைதளங்களில் எப்படி கவனமாக செய்திகளை பதிவிடவேண்டும் என்று விளக்கினார்.
செயலாளர் அப்துர் ரஹ்மான் உணர்வு வார இதழை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு செல்வது குறித்து பேசினார்.
உணர்வு இதழின் வளர்ச்சிக்கு பாடுப்பட்ட மாவட்ட, கிளை நிர்வாகிகளுக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
இறுதியில் மாநில தலைவர் அறிவும் செயலும் என்ற தலைப்பில் பேசிவிட்டு வரும் ஆறு மாதத்திற்கு அனைத்து நிர்வாகிகள்,உறுப்பினர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி அளிக்ககப்படும் என்று கூறினார்.
இறுதியில் மாநிலச் செயலாளர் அப்துல்லாஹ் நன்றியுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 18 வது மாநில பொதுக் குழு நிறைவுபெற்றது.
பொதுக்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பபட்டது.
பொதுக்குழு தீர்மானங்கள்
இட ஒதுக்கீடு
1. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இதனை அதிகப்படுத்தித் தருவதாக கடந்த தேர்தல்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.அதை நம்பி முஸ்லிம்களும் வாக்களித்தனர். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. தற்போது இருக்கும் அரசோ அவரது வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் எனக் கூறி வருகின்றது. அதனடிப்படையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டினை 3.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
2. அதே போன்று புதுச்சேரி மாநிலத்திலும் முஸ்லிம்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகின்றது. இதனை 6 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று, அங்குள்ள இஸ்லாமியர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்று இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக வழங்க வேண்டும் என்று, அம்மாநிலத்தை ஆளும் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
3. பருவமழை பொய்த்துப் போனதால் குடிநீருக்கும் மற்ற தேவைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கி, மக்களுக்கு முறையாகக் குடிநீர் வழங்கிட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று. தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
4. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர் .இதனால் பல மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் இதே நிலைதான் இருந்தது. அப்போது எதிர்க்கட்சியாய் இருந்த பா.ஜ.க நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சனைகளை உடனடியாகத் தீர்ப்போம் என்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இன்று வரை அதற்கான எந்த ஒரு முயற்சியையும் ஆளும் பா.ஜ.க அரசு செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சியை விட மிக மோசமான நிலையே இருந்து வருகிறது . இதன் மூலம் மோடி அரசாங்கத்தின் இரட்டை வேடம் நன்கு புலப்படுகின்றது. இதனை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
5. பக்தியின் பெயரால் மக்களை முட்டாளாக்கும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பக்தியை மூலதனமாக்கி கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் கார்ப்பரேட் சாமியார்களால் மனித உயிர்களுக்கும், இயற்கை வளங்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக ஈஷா யோகா மையத்தை நடத்திவரும் ஜக்கி வாசுதேவ் என்னும் கார்ப்பரேட் சாமியாரின் ஆசிரமத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. காடுகளை அழித்தும், வனவிலங்குகளைக் கொன்றும் இயற்கை வளங்களை ஜக்கி வாசுதேவ் அழித்து வருகின்றார். மேலும் அவரது ஆசிரமத்தில் மர்ம மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. தனது ஆசிரமத்திற்கு வரும் பெண்களை பெற்றோர்களிடமிருந்து பிரித்து, மூளைச்சலவை செய்து, அவர்களுக்கு மொட்டையடித்து சாமியார்களாக்கும் கொடூரச் செயல்களும் அங்கு நடக்கின்றன. ஆனால் இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் ஜக்கியின் நிகழ்ச்சிகளில் இந்தியப் பிரதமரும்,தமிழக முதல்வரும் கலந்து கொள்வது, கண்டிக்கத்தக்க செயலாகும். மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில் நடக்கும் மர்மங்களை மத்திய, மாநில அரசாங்கங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும். அவரிடமிருந்து மக்களையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.
6. கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்னும் நாடகத்தை மத்திய அரசு நடத்தியது.ஆனால் அரசின் நடவடிக்கைகளால் ஒரு சதவீத கருப்புப் பணம் கூட ஒழியவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.மாறாக பொதுமக்கள் அனைவரும் வங்கிகளிளும், ஏ.டி.எம் வாசல்களிளும் நின்று தங்களது உயிரை இழந்ததுதான் மிச்சம். இதோடு நின்றுவிடாமல் வங்கி என்னும் வட்டிக் கடைக்குள் மக்களைச் சிக்க வைத்து, அவர்களின் பொருளாதாரத்தைச் சுரண்டும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தற்போது இறங்கியுள்ளது. அரசின் இப்போக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.
7. மோடி அரசின் ஆட்சியில் இந்திய அளவில் தலித்துகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட MP, MLA ஆகியோரும் இந்தத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய மத்திய அரசை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.


Name

. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு
false
ltr
item
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: tntj 18 பொதுக்குழு தீர்மானங்கள்
tntj 18 பொதுக்குழு தீர்மானங்கள்
https://3.bp.blogspot.com/-dVJ7eVfuhKY/WNuwU_6L7fI/AAAAAAAAwfM/4j23GpeJNPQNSzxkr0bdckuKjf2ZlQdpQCLcB/s320/17522717_1482706075081735_1222901355901589249_n.jpg
https://3.bp.blogspot.com/-dVJ7eVfuhKY/WNuwU_6L7fI/AAAAAAAAwfM/4j23GpeJNPQNSzxkr0bdckuKjf2ZlQdpQCLcB/s72-c/17522717_1482706075081735_1222901355901589249_n.jpg
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்
http://www.tntjthiruvarur.com/2017/03/tntj-18.html
http://www.tntjthiruvarur.com/
http://www.tntjthiruvarur.com/
http://www.tntjthiruvarur.com/2017/03/tntj-18.html
true
3000485483480602733
UTF-8
Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy