பொதக்குடியில் உணர்வு போஸ்டர் கிழித்த அயோக்கியர்கள்திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையில் தீவரவாத எதிர்ப்பு பிரச்சாரம் மனித சங்கிலி குறித்து வெளியாக உணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. குறிப்பிட்ட இடங்களில் நம்முடைய சகோதரர்கள் தொடர்ச்சியாக ஒட்டிவந்துள்ளனர்.

நம்முடைய தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் ஒட்டிய போஸ்டர்களை சில அயோக்கியர்கள் கிழித்துவிட்டு, அதன் மீது அவர்களது விளம்பர போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அற்ப ஆதாயத்திற்காக அரசியல் நடத்துவம் இவர்கள் நம்முடைய போஸ்டர்களை கிழித்து எரிந்துள்ளனர்.

அரசியல் ஆதாயம் இல்லாமல், மக்களுக்காக பணியாற்றி வரும் நம்முடைய ஜமாஅத்தையும், சகோதரர்களையும் தீண்டிப்பார்ப்பதே இவர்களுக்கு வேலையாகிவிட்டது.

இதில் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரருக்கு உரிமையான சுவற்றில் ஒட்டப்பட்ட உணர்வு போஸ்டரை கிழித்து அவர்களது விளம்பரத்தை ஒட்டியுள்ளனர். அதனால், நமது சகோதரர்கள் அதன் மீது மீண்டும் போஸ்டரை ஒட்டியுள்ளனர் என்பது விசாரனையில் தெரியவந்த உண்மைகள்.

உண்மையில் நடந்தது என்ன? என்பதை விசாரிப்பதற்காக நாம் கிளை தலைவர் முஹம்மது இப்ராஹீமை தொடர்புகொண்டோம். அவர் நம்மிடம்...

மம.கட்சியின் போஸ்டர் மீது உணர்வு போஸ்டர் ஒட்டியுள்ளது உண்மை தான் என்றும், எது ஒட்டப்பட்டதர்கான காரணங்களை பட்டியலிட்டார்....

தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வணிக வளாக சுவர்களில், நாம் தொடர்ச்சியாக உணர்வு போஸ்டர்கள் ஒட்டியுள்ள இடங்களில் அதை கிழித்துவிட்டு, மமகட்சியினர் (தமுமுக) தங்கள் விளம்பர போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

அதேடு மட்டுமின்றி, நம்முடைய சகோதரர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சுவரில் உணர்வு போஸ்டர்களை கிழித்துவிட்டு, அதன் மீது தங்களது விளம்பர போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதனால் நம்முடைய சகோதரர்கள் அதன் மீது மீண்டும் ஒரு போஸ்டரை ஒட்டினார்கள்.

தமுமுக நபர் ஒருவர், இது குறித்து காவல்துறையிடம் புகார் பதிவு செய்துவிடுவதாவும் பூச்சாண்டி காட்டி சென்றார்.

இதுபோன்று தொடர்ச்சியாக பொதக்குடி கிளைக்குக்கு மம. கட்சியினர் தொந்தரவுகளை தருவதாகவும் நம்மிடம் தெரிவித்தார். அத்துடன் தான் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் தெரிவித்துக்கொண்டு முடித்தார்.

முகநூல் வதந்தி... :

முத்துப்பேட்டை ”மு”கைதீன் என்பவரை வைத்து முகநூலில் தவ்ஹீத் ஜமாஅத்தை, தருதலை ஜமாஅத் என்றும், நமக்கு கையும் வாயும் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் முகநூலில் எழுதும் இவனை பற்றி அனைவரும் அறிவார்கள்.

பொய்யனுக்கு அவனே முன்னுதாரணமாக கூறலாம்...

 மேலும், கிளை தலைவர் முகம்மது இஸ்மாயில் அவர்கள் மன்னிப்பு கேட்டதாக பச்சை பொய்யை தமது முகநூலில் எழுதியுள்ளார்.

ஆனால் அவர் இவ்வாறு ஒரு சம்பவமே நடக்கவில்லை என்கிறார்.

தவ்ஹீத் ஜமாஅத் எது செய்தாலும் அதை தடுப்பதற்கும், கேடுப்பதற்கும் என்று சிலர் திரிகின்றனர். அவர்களில் இந்த மு. மைதீனும் ஒருவன்.

இனியேனும் ஒரு செய்தியை யாராக இருந்தாலும், முகநூலில் செய்தியை பதிவதற்கு முன் அதன் உண்மையை அறிந்து பதிவு செய்யுங்கள். 

பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்! என்று அவர்களிடம் கூறப்படும் போது ”நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே” எனக் கூறுகின்றனர். 
(அல்குர்ஆன் 2:11) 

அல்லாஹ்வோ அவர்களைக் கோலி செய்கிறான். அவர்களது அத்துமீறலீல் அவர்களைத் தடுமாற விட்டு விடுகிறான். (அல்குர்ஆன் 2:15)

11/27/2014 05:38:00 PM | 0 comments

திருக்குர்ஆன் தர்ஜுமா : அடியக்கமங்கலம் 1

திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் 1 வது கிளை சார்பாக 26-11-2014 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் தர்ஜுமா படிக்கப்பட்டது.


11/27/2014 05:30:00 PM | 0 comments

படியுங்கள்!!! பரப்புங்கள்!!!..

படியுங்கள்!!! பரப்புங்கள்!!!..

வங்கி கணக்கு...

செய்தியை மின்அஞ்சலில் பெற

கடந்த மாதம்

கிளையை தேர்வு செய்க..

நேரம்

பார்வையாளர்கள்

நோன்பு உரை PJ (2014)

உணர்வு இதழ் 18-13

Online User

free counters